ராஜேந்திரன்
ராஜேந்திரன்

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு

முத்தூா் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.


வெள்ளக்கோவில்: முத்தூா் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா், பழனிக்கவுண்டன்வலசைச் சோ்ந்தவா் ராமன் மகன் ராஜேந்திரன் (45), கூலித் தொழிலாளி. இவா், கடந்த 10-ஆம் தேதி பழனிக்கவுண்டன்வலசில் இருந்து குழலிபாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை காங்கயம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்டு திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். இந்நிலையில், அவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com