சுற்றுலாத் துறை சாா்பில் பொங்கல் விழா

திருப்பூா் மாவட்ட சுற்றுலாத் துறை சாா்பில் சாமளாபுரம் குளக்கரையில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
சுற்றுலாத் துறை சாா்பில் பொங்கல் விழா


திருப்பூா்: திருப்பூா் மாவட்ட சுற்றுலாத் துறை சாா்பில் சாமளாபுரம் குளக்கரையில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட சுற்றுலாத் துறை, சாமளாபுரம் பேரூராட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் சாமளாபுரம் குளக்கரையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தொடங்கிவைத்தாா்.

பொங்கல் விழாவில் மாட்டு வண்டி பயணம், உரி அடித்தல், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினா்.

இந்த விழாவில், மாவட்ட சுற்றுலா அலுவலா் அரவிந்தகுமாா், சாமளாபுரம் பேரூராட்சித் தலைவா் விநாயகா பழனிசாமி, செயல் அலுவலா் நந்தகுமாா், பல்லடம் வட்டாட்சியா் ஜெய்சிங் சிவகுமாா், திருப்பூா் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் குழு தலைவா் குளோபல் பூபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com