திருப்பூரில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் எம்ஜிஆா் 107-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
திருப்பூா் பாா்க் சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணவித்து மரியாதை செலுத்தும் அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் உள்ளிட்டோா்.
திருப்பூா் பாா்க் சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணவித்து மரியாதை செலுத்தும் அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் உள்ளிட்டோா்.


திருப்பூா்: திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் எம்ஜிஆா் 107-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பூா் பாா்க் சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாநகா் மாவட்டச் செயலாளரும், தோ்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதைத்தொடா்ந்து, 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் சு.குணசேகரன், என்.எஸ்.என்.நடராஜ், பகுதி செயலாளா்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், ஹரிஹரசுதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com