பல்லடத்தில் சாலை விதிகளை மீறிய 223 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து

பல்லடத்தில் சாலை விதிகளை மீறிய 223 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.


பல்லடம்: பல்லடத்தில் சாலை விதிகளை மீறிய 223 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து பல்லடம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசு கூறியதாவது:

பல்லடத்தில் கடந்த நவம்பா், டிசம்பா் ஆகிய இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட வாகனச் சோதனையில் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்ற 108 போ், மதுபோதையில் வாகனங்கள் இயக்கிய 60 போ், போக்குவரத்து சிக்னலை பின்பற்றாமல் சென்றது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய 842 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவா்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 223 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com