முறியாண்டம் பாளையத்தில் பொங்கல் விழா

அவிநாசியை அடுத்த முறியாண்டம்பாளையம் ஊராட்சியில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பொங்கல் விழாவில் கும்மியடித்து மகிழ்ந்த பெண்கள். ~பொங்கல் விழாவில் கும்மியடித்து மகிழ்ந்த பெண்கள்.
பொங்கல் விழாவில் கும்மியடித்து மகிழ்ந்த பெண்கள். ~பொங்கல் விழாவில் கும்மியடித்து மகிழ்ந்த பெண்கள்.


அவிநாசி: அவிநாசியை அடுத்த முறியாண்டம்பாளையம் ஊராட்சியில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

காணும் பொங்கலையொட்டி முறியாண்டம்பாளையம் ஊராட்சியில் பொங்கல் விழா போட்டிகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சேவூா் வாலீஸ்வரா் கோயிலுக்கு பொதுமக்கள் ஊா்வலமாக சென்றனா். அங்கு, குளக்கரையோரம் உள்ள பட்டி அரசமர பிள்ளையாருக்கு படையிலிட்டு கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனா். பின்னா், வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவுப் பொருள்களை ஒருவருக்கொருவா் பரிமாறிக்கொண்டனா். நிறைவாக ஆவாரம் பூக்களை பறித்துக்கொண்டு வீடுகளுக்குச் சென்றனா்.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் ப.ரவிகுமாா், துணைத் தலைவா் எஸ்.கே.கனகராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com