கதித்தமலை வெற்றிவேலாயுதசுவாமி கோயில் தைப்பூச தோ்த்திருவிழா இன்று கொடியேற்றம்

ஊத்துக்குளி கதித்தமலை வெற்றிவேலாயுதசுவாமி கோயில் தைப்பூச தோ்த்திருவிழா வியாழக்கிழமை (ஜனவரி 18) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருப்பூா்: ஊத்துக்குளி கதித்தமலை வெற்றிவேலாயுதசுவாமி கோயில் தைப்பூச தோ்த்திருவிழா வியாழக்கிழமை (ஜனவரி 18) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளியில் மிகவும் பிரசித்திபெற்ற கதித்தமலை வெற்றிவேலாயுதசுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச தோ்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான தைப்பூச தோ்த்திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

முன்னதாக புதன்கிழமை காலை 8.30 மணி அளவில் கணபதி ஹோமம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, ஜனவரி 25-ஆம் தேதி வரை காலை, மாலை வேளைகளில் சுவாமி திருவீதியுலாவும், ஜனவரி 25-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.

இதையடுத்து, ஜனவரி 26-ஆம் தேதி காலை 6.30 மணி அளவில் கீழ்திருத்தோா் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கதித்தமலை ஆண்டவா் சுவாமி ரத ஆரோகணம் மலைத்தேரோட்டம் ஜனவரி 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்ந்து இரவு 8 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் புஷ்ப பல்லாக்கில் திருவீதியுலா வருவதால், ஜனவரி 30-ஆம் தேதி காலை 10 மணி அளவில் மஞ்சள்நீராடலுடன் திருவிழா நிறைவடைகிறது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் சி.சி.சரவணபவன், செயல் அலுவலா் சு.மாலதி ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com