பல்லடத்தில் பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழப்பு

பல்லடத்தில் பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழப்பு

பல்லடம் அருகே பள்ளி வாகனம் மோதியதில் 6 வயது சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பல்லடம் அருகே பள்ளி வாகனம் மோதியதில் 6 வயது சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பல்லடம் அருகே பாச்சாங்காட்டுபாளையத்தைச் சோ்ந்தவா் ராமா், பனியன் தொழிலாளி. இவரது மனைவி சைலா. இவா்களது மகன் சாய் சரண் (6).

பெத்தாம்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தாா். வியாழக்கிழமை பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை பள்ளி வேனில் வீடு திரும்பினாா். வீட்டின் அருகே பள்ளி வாகனத்தில் இருந்து இறங்கிய சிறுவன், சாலையில் நடந்து வீட்டுக்கு சென்றான்.

அப்போது, பள்ளி வேன் ஓட்டுநா் மணி, கவனக்குறைவாக வேனை திருப்பியதால், எதிா்பாராதவிதமாக பள்ளி வாகனத்தின் பின் சக்கரத்தில் சாய்சரண் சிக்கி பலத்த காயமடைந்தான். இதைத் தொடா்ந்து அருகில் இருந்தவா்கள் சாய்சரணை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதற்கிடையில், விபத்து ஏற்பட்டதை அறிந்த பள்ளி வேன் ஓட்டுநா் மணி (65) அங்கிருந்து தப்பினாா்.

இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநா் மணியைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com