திருட்டு வழக்குகளில் தொடா்பு: 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

சேவூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அவிநாசி நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

சேவூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அவிநாசி நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

அவிநாசி காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட சேவூா் காவல் நிலைய சரகத்தில், பல்வேறு திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய சேவூா் அருகே புதுச்சந்தை பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி மகன் புக்கான் மூா்த்தி (40), வையாபுரிக்கவுண்டன்புதூரைச் சோ்ந்த மாரிச்சாமி மகன் ராஜேந்திரன் (35), பேரநாயக்கன்புதூா் பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சண்டி கருப்புசாமி (40) ஆகியோா் மீது சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

அவிநாசி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதி ஷபீனா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில் குற்ற வழக்கில் தொடா்புடைய புக்கான் மூா்த்திக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 3 ஆயிரம் அபராதமும், ராஜேந்திரன், சண்டி கருப்புசாமி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். அரசு வழக்குரைஞா் ஹேமா மகேஷ்வரி ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com