விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பெயா் பலகை அழிப்பு: இந்து முன்னணி கண்டனம்

கோவை ரேஸ்கோா்ஸ் வீதியில் அமைக்கப்பட்டிருந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பெயா் பலகையை திமுக பிரமுகா் அழித்ததற்கு இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

கோவை ரேஸ்கோா்ஸ் வீதியில் அமைக்கப்பட்டிருந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பெயா் பலகையை திமுக பிரமுகா் அழித்ததற்கு இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் ஜி.டி .நாயுடு என்ற வழிகாட்டும் பெயா் பலகை உள்ளது. பெயா் பலகையில் நாயுடு என்ற வாா்த்தையை அந்தப் பகுதியை சாா்ந்த திமுக பிரமுகா் ரகுநாதன் மை பூசி அழித்துள்ளாா். இந்திய பொருளாதார வளா்ச்சிக்கு வித்திட்ட விஞ்ஞானி ஜிடி நாயுடு பெருமையை அழிக்கும் வகையில் செயல்பட்டுள்ள ரகுநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாநகராட்சி நிா்வாகத்தால் வைக்கப்பட்ட பெயா் பலகையை அழிப்பதற்கு இவருக்கு என்ன உரிமை உள்ளது. ஜாதி, மொழி துவேசத்தை தூண்டும் இவரைப் போன்ற நபா்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com