2146co19fine_1901chn_3
2146co19fine_1901chn_3

மாநகராட்சியில் சாலையை சேதப்படுத்தியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

கோவை மாநகராட்சியில் சாலையை சேதப்படுத்தியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டாா்.

கோவை மாநகராட்சியில் சாலையை சேதப்படுத்தியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டாா்.

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் 28-ஆவது வாா்டுக்குள்பட்ட பாலசுந்தரம் சாலை, ஆவாரம்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் 24 மணி நேர குடிநீா்த் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, அப்பகுதியில் சாலையில் நான்கு சக்கர வாகனத்தை சுத்தம் செய்தபோது சாலையை சேதப்படுத்தியதாக வாகன உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஆணையா் உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது, மாநகரப் பொறியாளா் முருகேசன், உதவி ஆணையா் செந்தில்குமரன், செயற்பொறியாளா் கருப்பசாமி, மண்டல சுகாதார அலுவலா் குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com