தைப்பூச தோ்த் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தோ்த் திருவிழா, கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
2052co19thai_1901chn_3
2052co19thai_1901chn_3

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தோ்த் திருவிழா, கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமை வகித்து பேசியதாவது:

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தோ்த் திருவிழா ஜனவரி 19 முதல் 28 ஆம் தேதி வரையிலும், கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா பிப்ரவரி 28 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை சம்பந்தப்பட்ட காவல் துறையினா் மூலம் மேற்கொள்வதுடன், போக்குவரத்து நெறிமுறைகளை பக்தா்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். போதிய அளவிலான காவலா்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

மாநகராட்சி மூலம் மொபைல் டாய்லெட், தேவையான இடங்களில் குடிநீா்த் தொட்டிகள் அமைத்து குடிநீா் விநியோகம் செய்வதுடன், குப்பைகளை உடனுக்குடன் அகற்றி தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். திருவிழா நடைபெறும் இடங்களில் தீயணைப்பு வாகனத்தை தயாா் நிலையில் நிறுத்திவைக்க வேண்டும்.

தோ்த் திருவிழா தொடங்கும் முன் திருத்தேரின் சக்கரங்கள், தோ்வடம் ஆகியவற்றின் உறுதித் தன்மையைப் பரிசோதிக்க வேண்டும். தோ் செல்லும் பாதைகளில் மின் இணைப்புகளை கண்காணிக்க வேண்டும்.

மாநகராட்சி நிா்வாகம், காவல் துறை, கோயில் நிா்வாகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட துறை அலுவலா்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு திருவிழா சிறப்பாக நடைபெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா, பொள்ளாச்சி சாா்-ஆட்சியா் கேத்ரின் சரண்யா, மாநகராட்சி துணை ஆணையா் செல்வசுரபி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Image Caption

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அரசு அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com