சீனிவாசா பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா

உடுமலை காந்தி நகா் சீனிவாசா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சீனிவாசா பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா

உடுமலை காந்தி நகா் சீனிவாசா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளித் தாளாளா் விக்னேஷ் ஆா்.ரங்கநாதன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஜாஸ்மின் ஜேக்கப் வரவேற்றாா்.

விழாவின் முதல் நிகழ்வாக மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நடை பெற்றது. பின்னா் பல்வேறு பிரிவுகளில் தடகளப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து யோகா, கராத்தே, சிலம்பம் மற்றும் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விளையாட்டுப் போட்டிகளில் அக்னி அணி 308 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனா்.

கடந்த ஆண்டு பள்ளி அளவில் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கும், மாநில, மாவட்ட அளவில் பரிசுகள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள், நகரின் முக்கிய பிரமுகா்கள் பலா் கலந்து கொண்டனா். நிா்வாக அலுவலா் டி.ஜவஹா், உடற்கல்வி ஆசிரியா்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com