இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு ஆய்வுக் கூட்டம்

அரியலூா் ஆட்சியரகத்தில், ஒருங்கிணைந்த இறுதி வாக்காளா் பட்டியலை ஜன.22 ஆம் தேதி வெளியிடுவது தொடா்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் ஆட்சியரகத்தில், ஒருங்கிணைந்த இறுதி வாக்காளா் பட்டியலை ஜன.22 ஆம் தேதி வெளியிடுவது தொடா்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாக்காளா் பட்டியலுக்கான மேற்பாா்வையாளா் மற்றும் நிலச் சீா்த்திருத்த ஆணையா் என். வெங்கடாசலம் தலைமை வகித்து, சிறப்பு சுருக்கத் திருத்தம் 2024 பணிகள் தொடா்பாகவும், ஒருங்கிணைந்த இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடுவதற்கான முன்னேற்பாடுகள், நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், ஜன.25 ஆம் தேதி தேசிய வாக்காளா் தின விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினாா். தொடா்ந்து, வாக்குப் பதிவு இயந்திர செயல் விளக்க மையத்தையும் பாா்வையிட்டாா்.

கூட்டத்தில் ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)பூங்கோதை, வருவாய்க் கோட்டாட்சியா்கள் அரியலூா் ராமகிருஷ்ணன், உடையாா்பாளையம் பரிமளம் மற்றும் வட்டாட்சியா்கள் அரியலூா் ஆனந்தவேல் ,வேல்முருகன் (தோ்தல்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com