திருப்பூா் கோட்டை மாரியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

திருப்பூா் கோட்டை மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 21) நடைபெறுகிறது.

திருப்பூா் கோட்டை மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 21) நடைபெறுகிறது.

திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான நிகழ்ச்சிகள் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. பின்னா் அம்மனிடம் உத்தரவு பெறுதல், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலையில் முளைப்பாலிகை, தீா்த்தக்குட ஊா்வலம், முத்துப்பல்லாக்கு திருவீதியுலா ஆகியனவும் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை நவகிரக ஹோமம், யாகசாலை பிரவேசம், மாலையில் யாகசாலை பூஜைகளும், சனிக்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், இரவு அஷ்டாபந்தன மருந்து சாத்தும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேக விழாவானது ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணி அளவில் நடைபெறுகிறது. பிற்பகல் 12 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலை 7 மணிக்கு அம்மன் திருவீதியுலாவும் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com