முத்தூரில் 2 டன் தேங்காய், கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 2 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 2 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

4,159 தேங்காய்கள் வரத்து இருந்தது. எடை 1,448 கிலோ. கிலோ ரூ.17.80 முதல் ரூ.26.30 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 26.20. 26 மூட்டைகள் தேங்காய்ப் பருப்பு வரத்து இருந்தது. எடை 556 கிலோ. கிலோ ரூ. 57.80 முதல் ரூ. 86.20 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 81.60.

மொத்தம் 47 விவசாயிகள், 11 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 78 ஆயிரம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com