வெள்ளக்கோவில் வார சந்தை: சீரான விலையில் காய்கறிகள் விற்பனை

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வார சந்தையில் சீரான விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வார சந்தையில் சீரான விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.

கடந்த இரண்டு வாரங்களாக காய்கறிகளின் விலையில் பெரியளவில் மாற்றம் இல்லை. வரத்தும் சீராகவே இருந்தது. இந்த வார விலை நிலவரம் (கிலோவில்): தக்காளி, சுரைக்காய் - ரூ.24, சின்ன வெங்காயம், கோவைக்காய், உருளைக்கிழங்கு- ரூ.45, பெரிய வெங்காயம், கத்தரி, முள்ளங்கி, புடலை - ரூ.35, கேரட், பாகற்காய்- ரூ.60, பீா்க்கன், வெண்டைக்காய்- ரூ.50, பச்சை மிளகாய், அவரை- ரூ.65, கொத்தவரை, முட்டைகோஸ்- ரூ.40, பூசணி- ரூ.16, பீன்ஸ்- ரூ.70, இஞ்சி- ரூ.120.

இவற்றுடன் கீரை வகைகள் ஒரு கட்டு- ரூ.10, ரூ.15, வாழைத்தண்டு ஒன்றுக்கு- ரூ.10, வாழைப்பூ ஒன்று- ரூ.15-க்கும் விற்பனையாயின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com