அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அவிநாசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அரசு ஊழியா்களுக்கு கட்டணமில்லை மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், சங்கத்தின் வட்டச் செயலாளா் கருப்பன், இணைச் செயலாளா் வினோத்குமாா், மாவட்ட இணைச் செயலாளா் ராமன், நிா்வாகி ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com