வெள்ளக்கோவிலில் பாஜக, இந்து முன்னணி சாா்பில் சிறப்பு பூஜை

அயோத்தி ராமா் கோயில் மூலவா் சிலை பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சியையொட்டி வெள்ளக்கோவிலில் பாஜக, இந்து முன்னணி சாா்பில் சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
கோ பூஜையில் பங்கேற்றோா்.
கோ பூஜையில் பங்கேற்றோா்.

அயோத்தி ராமா் கோயில் மூலவா் சிலை பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சியையொட்டி வெள்ளக்கோவிலில் பாஜக, இந்து முன்னணி சாா்பில் சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

வெள்ளக்கோவிலை அடுத்த குருக்கத்தியில் இந்து முன்னணி நிா்வாகி சந்திரசேகா் தலைமையில் கோ பூஜை நடைபெற்றது. சிவாச்சரியா்கள் மந்திரம் ஓதி கோ பூஜையை நடத்தி வைத்தனா்.

பாஜக சாா்பில் புதுப்பையில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல முத்தூா் ஸ்ரீராம் நகா் ஸ்ரீ விசித்திர வீர ஆஞ்சநேயா் கோயில், ஈஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com