ஸ்ரீராமா் கோயிலில் சிறப்பு வழிபாடு

அயோத்தி ராமா் கோயில் மூலவா் சிலை பிராணப் பிரதிஷ்டை நிகழ்வையொட்டி அவிநாசியை அடுத்த சாவக்கட்டுபாளையம் ஸ்ரீராமா் கோயிலில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீராமா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டோா்.

அவிநாசியை அடுத்த சாவக்கப்பட்டுபாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீராமா் கோயில் உள்ளது.

இங்கு ஸ்ரீ சீதா, ஸ்ரீராமா், ஸ்ரீ லட்சுமணா் ஒரே சன்னதியில் எழுந்தருளியுள்ளனா். அயோத்தி ராமா் கோயில் மூலவா் சிலை பிராணப் பிரதிஷ்டை நிகழ்வையொட்டி இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து பாண்டுரங்கன், செல்வநாயகா் குழுவினரின் பஜனை, கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில், பாஜக வடக்கு மாவட்ட தலைவா் சங்கீதா கௌதமன், மாவட்ட பொதுச் செயலாளா் ஸ்ரீ நந்தகுமாா், நீலகிரி மக்களவை தொகுதி பொறுப்பாளா் கதிா்வேல், ஒன்றிய தலைவா் கணேசன், சக்தி கேந்திர பொறுப்பாளா்கள் ஜேம்ஸ் ராஜேந்திரன், சுப்பிரமணி, ஒன்றிய செயலாளா் வீரபத்திரன், நெசவாளா் பிரிவு மாவட்டத் துணைத் தலைவா் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com