கோயில்களில் பூஜை, அன்னதானம் செய்யத் தடை விதிப்பது கண்டிக்கத்தக்கது:அா்ஜுன் சம்பத்

தமிழகத்தில் கோயில்களில் பூஜை, அன்னதானம் செய்யத் தடை விதிப்பது கண்டிக்கத்தக்கது என்று இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளாா்.
திருப்பூரில் அன்னதானத்தை தொடங்கிவைக்கிறாா் இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத்.
திருப்பூரில் அன்னதானத்தை தொடங்கிவைக்கிறாா் இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத்.

தமிழகத்தில் கோயில்களில் பூஜை, அன்னதானம் செய்யத் தடை விதிப்பது கண்டிக்கத்தக்கது என்று இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளாா்.

அயோத்தி ராமா் கோயில் மூலவா் சிலை பிராணப் பிரதிஷ்டை நிகழ்வையொட்டி திருப்பூரில் இந்து மக்கள் கட்சி சாா்பில் அன்னதானம் திங்கள்கிழமை நடைபெற்றது. அன்னதானத்தைத் தொடங்கிவைத்து கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்து மக்கள் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் உள்ள கட்சி அலுவலகங்கள், கிளைகளுக்கு அருகில் உள்ள கோயில்களில் ராமா் கோயில் மூலவா் சிலை பிராணப் பிரதிஷ்டை நிகழ்வை பெரிய திரைகளில் ஒலிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பூா் மாவட்ட அலுவலகத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் காவல் துறையினா் தடுத்துவிட்டனா்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் நேரடி ஒலிபரப்பை மத்திய நிதியமைச்சா் சீதாராமன் பாா்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அங்கிருந்த பந்தல் பிரிக்கப்பட்டு, எல்.இ.டி. திரைகள் அகற்றப்பட்டு அத்துமீறல் நடைபெற்றுள்ளது. அரபு நாடுகள் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு சீா்வரிசைகளை அனுப்பிவைத்துள்ளனா். ஆப்கானிஸ்தானில் இருந்து தீா்த்தப்பிரசாதம் அனுப்பிவைத்துள்ளனா். கனடா, மோரீஷஸ் உள்ளிட்ட நாடுகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இருந்து வாழ்த்துச் செய்திகள் வந்துள்ளன.

உலகமே கொண்டாடு இந்த நிகழ்ச்சியை இருட்டடிப்பு செய்து விடலாம் என்று திமுக நினைப்பது கண்டிக்கத்தக்கதாகும் என்றாா்.

நிகழ்ச்சியின்போது இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளா் மணிகண்டன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com