பல்லடத்தில் ஓட்டல் உரிமையாளரிடம் லஞ்சம்:தனிப்பிரிவு காவலா் பணியிடை நீக்கம்

பல்லடத்தில் ஓட்டல் உரிமையாளரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவது குறித்த ஆடியே சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து தனப்பிரிவு காவலா் சுபீன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
சுபீன்
சுபீன்

பல்லடத்தில் ஓட்டல் உரிமையாளரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவது குறித்த ஆடியே சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து தனப்பிரிவு காவலா் சுபீன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பல்லடத்தில் ஓட்டல் உரிமையாளரிடம் போலீஸாா் ஒருவா் லஞ்சம் கேட்டு மிரட்டுவது குறித்த ஆடியோ சமூக வலைதளத்தில் பரவியது. அதில், காரணம்பேட்டையில் ஓட்டல் நடத்தி வருகிறேன். சுபீன் என்ற காவலா் தினமும் 5 பேருடன் வந்த ரூ.2 ஆயிரத்துக்கு மேல் உணவு அருந்திவிட்டு பணம் தராமல் செல்வதுடன், பணம் கேட்டு மிரட்டுகிறாா்.

ஏற்கெனவே பணம் வழங்கிய நிலையில் மீண்டும் பணம் கேட்டு மிரட்டினாா். அப்போது, என்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தேன். அதற்கு மதுபானம் விற்பதாக பொய் வழக்குப் போடுவதாக மிரட்டுகிறாா். இதனால், தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். மேலும், எனக்கு ஏதும் நோ்ந்தால் காவலா் சுபீனே காரணம் என்று ஆடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாமிநாதன் பல்லடம் காவல் நிலையத்தில் எஸ்.பி. தனிப்பிரிவில் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலா் சுபீனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தவும் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com