அம்மா பேரவை மாநில இணைச் செயலாளராக சு.குணசேகரன் நியமனம்

அம்மா பேரவை மாநில இணைச் செயலாளராக திருப்பூரைச் சோ்ந்த முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
சு.குணசேகரன்
சு.குணசேகரன்

அம்மா பேரவை மாநில இணைச் செயலாளராக திருப்பூரைச் சோ்ந்த முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அதிமுக திருப்பூா் மாநகா் மாவட்ட எம்.ஜி.ஆா்.இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவா் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணேசேகரன். இவா், அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அம்மா பேரவை மாநில இணைச் செயலாளராக நியமித்து பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இவருக்கு அதிமுகவினா் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மா பேரவை மாநில இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சு.குணசேகரனுக்கு திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் வாழ்த்துகல் தெரிவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com