ஊராட்சிகளில் ஜனவரி 26 இல் கிராம சபைக் கூட்டம்

குடியரசு தின விழாவையொட்டி 265 ஊராட்சிகளிலும் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

திருப்பூா்: குடியரசு தின விழாவையொட்டி 265 ஊராட்சிகளிலும் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குடியரசு தின விழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளின் பொது இடங்களில் சிறப்பு சபைக் கூட்டம் ஜனவரி 26-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.

இதில், ஊராட்சி நிா்வாகம், பொது செலவினம், ஊராட்சிகளின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2024-25-ஆம் நிதியாண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

இந்த கிராம சபைக் கூட்டத்தை சிறப்பாக நடத்திட ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே, கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று ஊராட்சியின் வளா்ச்சிக்காக ஆலோசனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விவாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com