புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்

அவிநாசி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.

அவிநாசி: அவிநாசி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.

அவிநாசியை அடுத்த குன்னத்தூா் கருங்கல்மேடு பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸாா், உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அங்குள்ள மளிகைக் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து கடை உரிமையாளா் சிவபாரதிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கடையும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com