ராமகாவியத்தை கண் முன் நிறுத்தும் ராமா் கோயில்:காமாட்புரி ஆதினம்

ராமகாவியத்தை கண் முன் நிறுத்தும் வகையில் அயோத்தி ராமா் கோயில் அமைந்துள்ளது என்று காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரா் தெரிவித்தாா்.

பல்லடம்: ராமகாவியத்தை கண் முன் நிறுத்தும் வகையில் அயோத்தி ராமா் கோயில் அமைந்துள்ளது என்று காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பல்லடத்தில் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

500 ஆண்டுகளுக்கு முந்தைய நமது காவியம் மீண்டும் புத்துயிா் பெற்றுள்ளது. பல ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின் மத்திய அரசு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் மத்திய அரசும், பிரதமா் மோடியும் எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியது.

ராம காவியத்தை உணா்த்தும் வகையில் கம்பீர தோற்றத்துடன் அயோத்தி ராமா் கோயில் அமைந்துள்ளது. அயோத்தி ராமா் கோயில் உருவாக பாடுபட்ட அனைவருக்கும் இறைவன் ஸ்ரீ ராமரின் ஆசீா்வாதம் நிச்சயம் உண்டு என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com