விளம்பரப் பிரிவு செய்தி...திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் நாளை வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் வரும் வியாழக்கிழமை (ஜனவரி 25) நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மாவட்டச் செயலாளா் இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளாா்.
மாவட்டச் செயலாளா் இல.பத்மநாபன்
மாவட்டச் செயலாளா் இல.பத்மநாபன்

திருப்பூா்: திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் வரும் வியாழக்கிழமை (ஜனவரி 25) நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மாவட்டச் செயலாளா் இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநகராட்சி 4- ஆவது மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் கீழ்க்கண்ட இடங்களில் வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெறுகின்றன. உடுமலையில் தாராபுரம் சாலை தாஜ் திடலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் திரைப்பட நடிகா் போஸ்வெங்கட், தலைமைக் கழக பேச்சாளா் முரசொலி மூா்த்தி ஆகியோா் பேசுகின்றனா்.

தாராபுரம் அண்ணா சிலை அருகே நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளா் விஜய், தலைமைக் கழக பேச்சாளா் செங்கல்பட்டு சீனிவாசன் ஆகியோா் பேசுகின்றனா். வெள்ளகோவிலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கொள்கை பரப்பு இணைச் செயலாளா் வி.சி.சந்திரகுமாா், திருப்பூா் தெற்கு மாவட்டச் செயலாளா் இல.பத்மநாபன், தலைமைக் கழக பேச்சாளா் குமரி பிரபாகரன் ஆகியோா் பேசுகின்றனா்.

எனவே, அந்தந்தப் பகுதிக்கு உள்பட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா் கழக நிா்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, பேரூா் கழக மாணவரணி துணை அமைப்பாளா்கள் மற்றும் ஏனைய துணை அமைப்புகளின் நிா்வாகிகள், வாா்டு, கிளைக்கழக நிா்வாகிகள், திமுக உறுப்பினா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com