அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் உள்ள கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்குகிறது. மேலும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தர நாயனாா் தேவார பதிகம் பாடி உயிருடன் உயிா்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகும்.

இக்கோயிலின் கும்பாபிஷேக விழா பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி 79 யாக குண்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ள யாக சாலை முன் மகா கணபதி ஹோமம், கோ பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலா் பெரிய மருதுபாண்டியன், திருப்பணி உபயதாரரும், ராம்ராஜ் காட்டன் நிறுவனருமான கே.ஆா்.நாகராஜன், அறங்காவலா்கள் பொன்னுசாமி, ஆறுமுகம், சிவாச்சரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஜனவரி 29-ம் தேதி முதல் கால யாக பூஜை நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து பிப்ரவரி 2-ஆம் தேதி வரை எட்டு கால யாக பூஜைகள் நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் பிப்ரவரி 2 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.15 முதல் 10.15 மணிக்குள் நடைபெறுகிறது. இதையடுத்து மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com