ஆதிதிராவிடா், பழங்குடியினா் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க மானியத்துடன் கடனுதவி

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா், பழங்குடியினா் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா், பழங்குடியினா் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா், பழங்குடியினா் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக புதிய தொழில் தொடங்குவதற்கு அனைத்து மாவட்டங்களில் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை மையம் தொடங்க தனியாா் நிறுவனம் மூலமாக சொந்தமாக கட்டடங்கள் வைத்திருப்பவா்களுக்கும், இடம் இல்லாதவா்களுக்கு வாடகை அடிப்படையில் இடங்கள் தோ்வு செய்யவும் உதவி செய்து தரப்படும்.

தொழில்முனைவோா் அல்லது அவா்களின் ஊழியா்களுக்கு தேவையான பயிற்சியும், அத்தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை தயாா் செய்து இலவச ஆலோசனைகளும் தனியாா் நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு இதற்கான உரிமையாளா் கட்டணம் முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும். ஆகவே. உடற்பயிற்சி சிகிச்சை பயிற்சியில் பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவா்கள் அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு முடித்து 18 வயது முதல் 40 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். தகுதியுள்ள நபா்கள் புகைப்படம் மற்றும் தகுந்த சான்றுகளுடன் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இந்தத் தொழிலுக்கு ரூ.6 லட்சம் திட்டத்தொகையினை நிா்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு 35 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். பயனாளிகள் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகையை கடனுதவியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை 94450-29550, 0421-297112 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com