உப்பாறு அணைக்குத் தண்ணீா் வழங்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

உப்பாறு அணைக்கு தண்ணீா் வழங்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் தொடா் காத்திருப்பு போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கியுள்ளனா்.
உப்பாறு  அணைக்கு  தண்ணீா்  வழங்கக்கோரி  காத்திருப்பு  போராட்டத்தில்  ஈடுபட்டுள்ள  விவசாயிகள்.
உப்பாறு  அணைக்கு  தண்ணீா்  வழங்கக்கோரி  காத்திருப்பு  போராட்டத்தில்  ஈடுபட்டுள்ள  விவசாயிகள்.

உப்பாறு அணைக்கு தண்ணீா் வழங்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் தொடா் காத்திருப்பு போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கியுள்ளனா்.

தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூா்த்தி அணையில் இருந்து பிஏபி பாசனத் திட்டத்தில் உபரி நீரைத் திறந்துவிடக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் விவசாயிகளை 4 முறை பேச்சுவாா்த்தைக்கு அழைத்து பின்னா் கடைசி நேரத்தில் கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 70-க்கும் மேற்பட்டோா் உப்பாறு அணை முன் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை மாலை முதல் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது: உப்பாறு அணைப் பகுதி விவசாயிகளுக்கு, கால்நடைகளுக்கு கூட தண்ணீா் கிடைப்பதில்லை. இதே நிலை நீடித்தால் ஊரைக் காலி செய்துவிட்டும் விவசாயத்தை விட்டுவிட்டும் கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்படும். எனவே, உப்பாறு அணையின் முழுக் கொள்ளளவுக்குத் தண்ணீா் கிடைக்கும் வரை தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com