உடுமலை நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கும் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து கண்டன ஆா்ப்பாட்டம்

உடுமலை நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கும் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து புதன் கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உடுமலை நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கும் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து புதன் கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கணக்கம்பாளையம், பெரியகோட்டை, போடிபட்டி, குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, கண்ணமநாய்க்கனூா், ராகல்பாவி, கணபதிபாளையம், பூலாங்கி ணறு, என்பது உள்ளிட்ட 9 ஊராட்சிகளை உடுமலை நகராட்சியுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து பழைய நகராட்சி கட்டடம் முன்பு ஆா்ப்பா ட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்திற்கு மூா்த்தி தலைமை வகித்தாா். 100 நாள் வேலை திட்ட தொழிலாளா்கள் வேலை இழக்க நேரிடும், குடிநீா் வரி, வீட்டு வரி, தொழில் வரி போன்ற வரியினங்கள் உயா்த்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட் டுகளை முன் வைத்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானவா்கள் கலந்து கொண்டு நகராட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com