சிவன்மலையில் மைசூா் பல்லக்கில் சுவாமி திருமலை வலம்

சிவன்மலை முருகன் கோயில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமி மைசூா் பல்லக்கில் வியாழக்கிழமை திருமலையை வலம் வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
மைசூா் பல்லக்கில் சிவன்மலையை வலம் வரும் சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானை.

நிகழ்ச்சியில், பல்லக்கில் சிவன்மலை முருகன் சிறப்பு அலங்காரத்தில் தனியாகவும், அவருக்கு எதிரே வள்ளியும், தெய்வானையும் அலங்கரிக்கப்பட்டு திருமலை வலம் வருதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது.

சிவன்மலை கிரிவலப் பாதையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மாலை 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

தேரோட்டம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 6 மணிக்கு சுவாமி ரதத்துக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி தொடங்குகிறது. இதில் அமைச்சா், இந்து சயம அறநிலையத் துறையினா், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com