திமுக வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்

வெள்ளக்கோவிலில் திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் திமுக ஒன்றியச் செயலாளா் கே. சந்திரசேகரன்.
கூட்டத்தில் பேசுகிறாா் திமுக ஒன்றியச் செயலாளா் கே. சந்திரசேகரன்.

வெள்ளக்கோவிலில் திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தாராபுரம் சாலையிலுள்ள வி.பி.எம்.எஸ். நகரில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, வெள்ளக்கோவில் நகர திமுக செயலாளா் எஸ்.முருகானந்தன் தலைமை வகித்தாா். திருப்பூா் தெற்கு மாவட்டச் செயலாளா் இல. பத்மநாபன், மாவட்ட துணைச் செயலாளா் கே.ஆா்.முத்துகுமாா், ஒன்றியச் செயலாளா் கே.சந்திரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கொள்கை பரப்பு இணைச் செயலாளா் வி.சி.சந்திரகுமாா், தலைமைக் நிலைய பேச்சாளா் குமரி பிரபாகரன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா். கட்சியின் ஒன்றிய, நகர நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com