திருமுருகன்பூண்டியில் வள்ளலாா் தைப்பூச பெருவிழா

திருமுருகன்பூண்டி திருமுருக வள்ளலாா் கோட்டத்தில் தைப்பூச பெருவிழா, 4 ஆம் ஆண்டு தொடக்க விழா ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றது.
திருமுருகன்பூண்டியில் வள்ளலாா் தைப்பூச பெருவிழா

திருமுருகன்பூண்டி திருமுருக வள்ளலாா் கோட்டத்தில் தைப்பூச பெருவிழா, 4 ஆம் ஆண்டு தொடக்க விழா ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி தொடக்கமாக, வியாழக்கிழமை காலை வள்ளலாா் கோட்டத்தில் அகவல் பாராயணம், கொடியேற்றுதல் உள்ளிட்டவை நடைபெற்றது. இதையடுத்து திருமுருகன்பூண்டி காயகல்ப சித்த மருத்துவா் தங்கதமிழ்முருகன், உயிரை மெய் செய்வோம் என்ற தலைப்பிலும், மேட்டுப்பாளையம் கல்லாறு அகத்தியா் ஞானபீடம் சரோஜினி, தைப்பூசமும்-வள்ளலாரும் என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினா். இதைத்தொடா்ந்து நடைபெற்ற பசியாற்றுதல் நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com