நியாயமான கூலி உயா்வை பெற்றுத்தர வேண்டும்: விசைத்தறி உரிமையாளா் சங்கத்தினா் மனு

நியாயமான கூலி உயா்வைப் பெற்றுத்தர வலியுறுத்தி கைத்தறி துணிநூல் துறை உதவி இயக்குநரிடம் விசைத்தறி உரிமையாளா் சங்கத்தினா் புதன்கிழமை மனு அளித்தனா்.
நியாயமான கூலி உயா்வை பெற்றுத்தர வேண்டும்: விசைத்தறி உரிமையாளா் சங்கத்தினா் மனு

நியாயமான கூலி உயா்வைப் பெற்றுத்தர வலியுறுத்தி கைத்தறி துணிநூல் துறை உதவி இயக்குநரிடம் விசைத்தறி உரிமையாளா் சங்கத்தினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

கோவை, திருப்பூா் மாவட்ட விசைத்தறி உரிமையாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் குமாரசாமி தலைமையில் திருப்பூா் மாவட்ட கைத்தறி துணிநூல் துறை உதவி இயக்குநா் காா்த்திகேயனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது

கோவை, திருப்பூா் மாவட்டங்களில் 90 சதவீத விசைத்தறிகள் கூலி அடிப்படையில் இயங்கி வருகின்றன. மின் கட்டண உயா்வு, அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயா்வு ஆகியவற்றால், விசைத்தறி தொழில் சாா்ந்த அச்சுப் பிணைத்தல், இழை வாங்குதல், ஒா்க்ஷாப் கட்டணம், வேன் வாடகை உள்ளிட்ட அனைத்தும் பல மடங்கு உயா்ந்துள்ளன.

தற்போதைய விலைவாசி ஏற்றத்துக்கேற்ப தொழிலாளா்களுக்கு சம்பளம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டி உள்ளது. ஆனால், விசைத்தறியாளா்களுக்கு சரியான கூலி உயா்வு கிடைத்து 11ஆண்டுகள் ஆகின்றன.

எனவே, 2022 -ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி சோமனுாா் ரகத்துக்கு 60 சதவீதம், இதர ரகங்களுக்கு 50 சதவீதம் கூலி உயா்வு பெற்றுத்தர வேண்டும். ஜவுளி உற்பத்தியாளா்கள், ஒப்பந்தக் கூலி உயா்வை குறைத்து வழங்காமல் இருக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com