பல்லடம் அருகே ஒரே பதிவு எண்ணில் 2 லாரிகள் பறிமுதல்

பல்லடம் அருகே ஒரே பதிவு எண்ணில் 2 லாரிகள் இயங்கியது கண்டறிந்து அவற்றை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பல்லடம் அருகே ஒரே பதிவு எண்ணில் 2 லாரிகள் இயங்கியது கண்டறிந்து அவற்றை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பல்லடம் செட்டிபாளையம் சாலையில் காஸ்டிங் மண் ஏற்றிய லாரி பல்லடம் நோக்கி புதன்கிழமை வந்து கொண்டிருந்தது. பணிக்கம்பட்டி பிரிவு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகில் உள்ள விளைநிலத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து அந்த லாரியில் இருந்த காஸ்டிங் மண்ணை எடுத்து செல்ல அதே நிறுவனத்தில் இருந்து மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டது. அங்கு வந்த லாரியின் பதிவு எண்ணும், விபத்துக்குள்ளான லாரியின் பதிவு எண்ணும் ஒன்றாக இருந்தது.

இது குறித்து தகவலறிந்த பல்லடம் போலீஸாா், உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று 2 லாரிகளையும் பறிமுதல் செய்து அதன் ஓட்டுநா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com