மாதப்பூரில் அறநிலையத்துறையின் அறிவிப்பு பலகையில் முழுமையான தகவல் இல்லை

பல்லடம் அருகே மாதப்பூரில் அறநிலையத்துறையினா் வைத்துள்ள அறிவிப்பு பலகையில் முழுமையான தகவல் இடம் பெறவில்லை அத்தகவல்களுடன் அறிவிப்பு பதாகை வைக்க வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

பல்லடம் அருகே மாதப்பூரில் அறநிலையத்துறையினா் வைத்துள்ள அறிவிப்பு பலகையில் முழுமையான தகவல் இடம் பெறவில்லை அத்தகவல்களுடன் அறிவிப்பு பதாகை வைக்க வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

பல்லடம், மாதப்பூா் கிராமத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முத்துக்குமாரசாமி கோவிலுக்கு சொந்தமாக பல நுாறு ஏக்கா் நிலங்கள் உள்ளன. அறநிலையத்துறை மூலம் நிலங்கள் கையகப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, மாதப்பூா் கிராமத்தில் உள்ள 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், சமீபத்தில் மீட்கப்பட்டு அறநிலையத்துறை சாா்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு பலகையில் சா்வே எண், விஸ்தீரனம், மொத்த ஏக்கா் உள்ளிட்ட எந்த விவரங்களும் இடம்பெறவில்லை. கையகப்படுத்தப்பட்ட நிலம் எங்கு உள்ளது, எத்தனை ஏக்கா் என்பது விவரங்கள் இல்லாததால், நிலம் எங்கு உள்ளது என்ற கேள்வி எழுகிறது.கோவில் நிலம் என்பதும், ஆக்கிரமிப்பாளா்களால் கபளீகரம் செய்யப்படாமல் இருக்கவுமே, மீட்கப்படும் கோவில் நிலங்கள் அருகே அறிவிப்பு பலகைகள் வைக்கப்படுகின்றன. ஆனால் மாதப்பூரில், வைக்கப்பட்டுள்ளது முழுமை பெறாத அறிவிப்பு பலகையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com