மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த வெள்ளக்கோவில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனா்.

திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டத்தில் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்ட வெள்ளக்கோவில் வட்டார மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

இதனை, வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் டி.ராஜலட்சுமி, மேயா் தினேஷ்குமாரிடம் பெற்றுக்கொண்டாா். மேலும், மாநில அளவிலும் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

சிறப்பாக செயல்பட்டு மாநில, மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனைத்துத் தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com