மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் கூட்டம்

மொழிப்போா் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் கூட்டம் காங்கயத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் கூட்டம்

மொழிப்போா் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் கூட்டம் காங்கயத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் புரட்சிகர இளைஞா் முன்னணியின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைப்பின் காங்கயம் நிா்வாகி ஸ்டாலின் தலைமை வகித்தாா். இதில், தமிழ் மொழிக்காக இன்னுயிரை நீத்தவா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா் தாய்மொழியைக் காப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இதில் புரட்சிகர இளைஞா் முன்னணி அமைப்பின் காங்கயம் பொறுப்பாளா் கவி, திராவிடா் கழக நிா்வாகி மணிவேல், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பொறுப்பாளா் வேதமுத்து, பெரியாரின் பெண்கள் அமைப்பு நிா்வாகி செங்கொடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com