தோ்த் திருவிழா கடைகளுக்கு நாளை ஏலம்

வெள்ளக்கோவில், ஜன. 27: வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் தோ்த் திருவிழா கடைகளுக்கு திங்கள்கிழமை (ஜனவரி 29) ஏலம் நடைபெறுகிறது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இந்தக் கோயிலின் தோ்த் திருவிழா வரும் மாா்ச் 8 முதல் 10 -ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு 10 நாள்களுக்கு கோயில் அருகில் 300-க்கும் மேற்பட்ட திருவிழா கடைகள் அமைக்கப்படும். மேலும் ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெறும். இவற்றுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து சுங்கம் வசூலிக்கும் ஏலம் திங்கள்கிழமை (ஜனவரி 29) பிற்பகல் 2 மணிக்கு கோயில் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

கோயில் செயல் அலுவலா் மு.ராமநாதன், கோயில் குலத்தவா்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com