குண்டடம் அருகே விவசாயிகள் 3-ஆவது நாளாக போராட்டம்

திருப்பூா், ஜன. 27: உப்பாறு அணைக்கு தண்ணீா் வழங்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் 3- ஆவது நாளாக சனிக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூா்த்தி அணையில் இருந்து பிஏபி பாசனத்திட்டத்தில் உபரி நீரைத் திறந்துவிடக்கோரி விவசாயிகள் 70-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை முதல் உப்பாறு அணைக்கு முன் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டம் 3- ஆவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com