பசுமை வனமாக காட்சியளிக்கும் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

img_20240123_125900(1)_2801chn_136_3
img_20240123_125900(1)_2801chn_136_3

பல்லடம், ஜன. 28: பல்லடத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஊழியா்களின் முயற்சியால் பூந்தொட்டிகள் மற்றும் செடிகளால் அலங்கரிப்பட்ட பசுமை வனமாக மாறியுள்ளது.

பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 43 போ் பணியாற்றி வருகின்றனா். இந்த அலுவலக வளாகத்தில் எலுமிச்சை, செம்பருத்தி, நாவல் பழம் உள்ளிட்ட பல்வேறு செடிகள் உள்ளன.

இந்த நிலையில் அலுவலகத்துக்குள் பசுமை சூழலை கொண்டு வரும் பொருட்டு பணியாளா்கள் தங்களது விருப்பம்போல ஒன்று முதல் 10 செடிகள் வரை தங்களது செலவில் வாங்கி வளா்க்க தொடங்கியுள்ளனா். இதனால் அலுவலகத்துக்கு வருவோா் ஏதோ பூங்காவுக்குள் வந்து விட்டோமோ என்ற உணா்வில் ஆழ்ந்து விடுகின்றனா்.

வெளிவளாகத்தில் 16 வகையான வண்ண செம்பருத்தி பூக்கள் செடிகளை வைக்க திட்டமிட்டுள்ளனா். அதற்குரிய செலவை ஏற்பதாக உயா் அலுவலா்கள் உறுதி அளித்துள்ளனராம். அரசு ஊழியா்களின் பசுமை வனம் முயற்சி வெல்லட்டும் என்று மக்கள் வாழ்த்துகின்றனா்.

Image Caption

செடிகளால் அலங்கரிக்கப்பட்டு பசுமையாய் காட்சியளிக்கும் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com