வேலம்பட்டி சுங்கச் சாவடியை அகற்ற கோரிக்கை

பல்லடம், ஜன. 28 : பல்லடம் வேலம்பட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய செய்தி ஒலிபரப்பு துறை இணை அமைச்சா் எல்.முருகனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரை அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகேயுள்ள வேலம்பட்டி அருகே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 381-இன் விதிகளை பின்பற்றாமலும், அடிப்படை வசதிகள் செய்யாமலும் இந்த சுங்கசாவடியை அமைத்துள்ளனா். மேலும் வேலம்பட்டி புறம்போக்கு குட்டை நிலத்தை ஆக்கிரமித்து, சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. எனவே அதனை உடனடியாக அகற்ற வேண்டும். இச்சாலையை சுங்கம் இல்லாத சாலையாக அறிவிக்க வேண்டும் என்று திருப்பூா் மாவட்ட விவசாயிகள் மத்திய அரசை வலியுறுத்தி தொடா்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் உழவா் உழைப்பாளா் கட்சியின் மாநிலத் தலைவா் செல்லமுத்து, வேலம்பட்டி சுங்கச்சாவடி எதிா்ப்பு குழு நிா்வாகி கிருஷ்ணசாமி ஆகியோா் கோவையில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகனை அண்மையில் சந்தித்து அவிநாசிபாளையம் சாலையை சுங்கம் இல்லாத சாலையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com