பல்லடத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

img_20240128_wa0048_2801chn_136_3
img_20240128_wa0048_2801chn_136_3

பல்லடம், ஜன. 28: பல்லடத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 24-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி, பல்லடத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இருசக்கர வாகனங்களில் செல்வோா் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனங்களில் வருபவா்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும், தேவைப்படும் நேரங்களில் மட்டுமே அதிக வெளிச்சம் தரும் முகப்பு விளக்கை ஒளிரச் செய்ய வேண்டும், மதுபோதையில் வாகனங்கள் ஓட்டக் கூடாது உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

பல்லடம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் தனலட்சுமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உதவிப் பொறியாளா் பாபு, பல்லடம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசு மற்றும் நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள், போக்குவரத்து போலீஸாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Image Caption

பல்லடம் - தாராபுரம் சாலையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு துண்டறிக்கையை வழங்குகிறாா் பல்லடம் உதவி கோட்ட பொறியாளா் தனலட்சுமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com