தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் மீது தாக்குதல்: மேலும் 3 போ் கைது

பல்லடம் தனியாா் தொலைக்காட்சி செய்தியாளரை அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் தனியாா் தொலைக்காட்சி செய்தியாளரை அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பல்லடத்தில் தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் நேசபிரபுவை ஒரு கும்பல் புதன்கிழமை அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த சம்பவம் தொடா்பாக காமநாயக்கன்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனற். இதில் செய்தியாளரை அரிவாளால் வெட்டிய திருப்பூரைச் சோ்ந்த சரவணன் (23), ஈரோட்டைச் சோ்ந்த பிரவீன் (27) ஆகியோரை காமநாயக்கன்பாளையம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இந்த நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பாலபாரதி (28), ஹரிஹரன் (25), ஜெயபிரவீன் (23) ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com