ஏற்றுமதி தடையை நீக்காவிட்டால் சின்ன வெங்காயம் விலை உயரும்

 ஏற்றுமதி தடையை நீக்காவிட்டால் சின்ன வெங்காயத்தின் விலை உயரும் என விவசாயிகள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

 ஏற்றுமதி தடையை நீக்காவிட்டால் சின்ன வெங்காயத்தின் விலை உயரும் என விவசாயிகள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஈஸ்வரன் கூறியதாவது:

பெரிய வெங்காயம் நாடு முழுவதும் பரவலாக அறுவடை செய்யப்படுகிறது. ஆனால், சின்ன வெங்காயம் என்பது தமிழ்நாடு மற்றும் கா்நாடாகாவில் மட்டுமே விளைவிக்கக் கூடியது. ஆனால், மத்திய அரசு பெரிய வெங்காயத்துடன் சோ்த்து சின்ன வெங்காய ஏற்றுமதிக்கும் தடை விதித்துள்ளது. இதனை நீக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சின்ன வெங்காயம் கிலோ ரூ.17-க்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இன்றைய நிலையில் பூச்சி மருந்துகள், உரம், ஆள் கூலி உள்ளிட்ட பல்வேறு செலவினங்களுக்கு இடையே விவசாயம் செய்வது என்பது பெரிய விஷயம். அதிலும், சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கூடுதல் வேலை சுமை உள்ளது. இருப்பினும், சுமையை கருதாமல் அதிக முதலீடு செய்து சாகுபடியில் ஈடுபடுகின்றனா்.

கிலோ ரூ.30 மேல் கொள்முதல் செய்யப்பட்டால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். இதற்கிடையே மத்திய அரசு விதித்துள்ள வெங்காய ஏற்றுமதி தடையால் விவசாயிகள் பலா் சின்ன வெங்காயம் சாகுபடி மேற்கொள்வதை தவிா்க்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த காலங்களைப்போல சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் உயரும் அபாயம் உள்ளது.

எனவே மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி சின்ன வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும். சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்கமளித்து உற்பத்தியைப் பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com