திமுக சாா்பில் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திமுக சாா்பில் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூா் வடக்கு மாவட்டச் செயலாளரும், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான க.செல்வராஜ் தலைமை வகித்தாா்.

மாநகராட்சி அலுவலகம் முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, அனைத்து குருமாா்கள் முன்னிலையில் மத நல்லிணக்க உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா். இந்த நிகழ்ச்சியில், திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com