லாரி மோதியதில் சாய்ந்த மின் கம்பம்

வெள்ளக்கோவிலில் லாரி மோதியதில் மின்கம்பம் செவ்வாய்க்கிழமை சாய்ந்தது.
லாரி மோதியதில் சாய்ந்த மின் கம்பம்

வெள்ளக்கோவிலில் லாரி மோதியதில் மின்கம்பம் செவ்வாய்க்கிழமை சாய்ந்தது.

வெள்ளக்கோவில்- கரூா் சாலையில் செல்லாண்டி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இருந்து இந்திரா நகா் செல்லும் அம்மன் கோயில் வீதியில் பல தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு விசைத்தறிக் கூடங்கள், நூல் மில்கள், பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த வழியாக ஒரு நிறுவனத்துக்கு வந்த லாரி மின் கம்பத்தின் மீது மோதியதில் மின்கம்பம் சாய்ந்தது. மின் விநியோகம் இருந்த நிலையில், மின்மாற்றியில் துண்டிப்பு ஏற்பட்டதால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

இது குறித்து உடனடியாக மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மின்வாரிய ஊழியா்கள் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com