திருப்பூரில் ரயிலில் அடிபட்டு 2 போ் உயிரிழப்பு

திருப்பூரில் தண்டவாளத்தைக் கடத்த முயன்றபோது ரயிலில் அடிபட்டு 2 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

திருப்பூா்: திருப்பூரில் தண்டவாளத்தைக் கடத்த முயன்றபோது ரயிலில் அடிபட்டு 2 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

திருவாரூா் மாவட்டம், குடவாசல் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (28), இவரின் நண்பா் சரவணபவன் (29). இருவரும், திருப்பூா் காவிலிபாளையம்புதூா் பகுதியில் தங்கி கட்டட வேலை செய்து வந்தனா்.

இந்நிலையில், தேநீா் அருந்துவதற்காக தண்டவாளத்தை திங்கள்கிழமை கடக்க முயன்றனா். அப்போது, கோவையில் இருந்து ஈரோடு வழியாகச் சென்ற ரயில் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் ரயில்வே காவல் துறையினா் இருவரது சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்து குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com