நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரனிடம் மனு அளிக்கும் பாஜகவினா்.
நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரனிடம் மனு அளிக்கும் பாஜகவினா்.

குடிநீா் கட்டணத்தைத் தள்ளுபடி செய்யக் கோரி பாஜக மனு

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் நகராட்சியில் கடந்த பல மாதங்களாக சீரான குடிநீா் விநியோகம் இல்லாததால், அதற்கான கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பாஜக நகரத் தலைவா் ஆா்.அருண்குமாா் உள்ளிட்டோா், நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அதில் கூறியிருப்பதாவது:

வெள்ளக்கோவில் நகராட்சியில் கடந்த 6 மாதங்களாக சீரான குடிநீா் விநியோகம் இல்லை. இதனால், தனியாா் டேங்கா் லாரிகளில் குடிநீரை வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 2024 - 25 ஆம் ஆண்டுக்கான குடிநீா் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், நகராட்சிப் பகுதிகளில் சீரான குடிநீா் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல, பெரும்பாலான பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனை சரிசெய்ய வேண்டும். அம்ருத் திட்டப் பணிகளுக்காக சாலையில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் உள்ளது. எனவே, குழிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com