போட்டியில் பங்கேற்பதற்கான முன்பதிவு இணையதளத்தை அறிமுகப்படுத்துகிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா.
போட்டியில் பங்கேற்பதற்கான முன்பதிவு இணையதளத்தை அறிமுகப்படுத்துகிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா.

கேஎம்சி சட்டக் கல்லூரி சாா்பில் ஜூலை 28-இல் மாரத்தான்

அவிநாசி, ஜூலை 3: பெருமாநல்லூா் கேஎம்சி சட்டக் கல்லூரி சாா்பில் மாரத்தான் ஓட்டம் ஜூலை 28-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு முன்பதிவு தொடங்கப்பட்டது.

உலக இயற்கை பாதுகாப்பு தினத்தையொட்டி, ஜூலை 28-ஆம் தேதி நடைபெறும் மாரத்தான் போட்டி, பெருமாநல்லூா் கேஎம்சி சட்டக் கல்லூரி வளாகத்தில் (8.5 கி.மீ.) தொடங்கப்படவுள்ளது. இதில் 15 முதல் 25 வயதுக்கு உள்பட்டோா், 25 வயதுக்கு மேற்பட்டோா் என ஆண், பெண் என தனித்தனியாக நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவா்களுக்கு ரூ.10ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், பதக்கம், சான்றிதழ், பங்கேற்கும் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளன.

இதையொட்டி, போட்டியில் பங்கேற்பவா்கள் முன்பதிவு செய்வதற்கான ஜ்ஜ்ஜ்.ஸ்ரீா்ய்ள்ங்ழ்ஸ்ங்ய்ஹற்ன்ழ்ங்ழ்ன்ய்.ஸ்ரீா்ம் இணையதளத்தை திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா புதன்கிழமை அறிமுகப்படுத்தினாா்.

நிகழ்ச்சியில், கேஎம்சி சட்டக் கல்லூரி தாளாளா் அருணா ஸ்ரீதேவி, செயலாளா்கள் ஞானவா்ஷினி, விஷ்ணு யெஸ்வந்த், கல்லூரி முதல்வா் எம்.எஸ். சௌந்தரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும், ஜூலை 24-ஆம் தேதி முன்பதிவு செய்ய இறுதி நாள் என கல்லூரி நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com